செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முட்டைகோஸ் !!

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (18:44 IST)
முட்டைக்கோஸில் உள்ள இரும்புச்சத்து, வைட்டமின் பி 1,வைட்டமின் பி 2,வைட்டமின் பி 3 மற்றும் விட்டமின் D ஆகியவை அதிகம் உள்ளதால், குடல் புற்று நோய்க்கு சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது.
 

முட்டைக்கோசில் கால்சியம் மற்றும் வைட்டமின் கே வளமாக உள்ளதால், இதை அடிக்கடி உணவில் சேர்த்து வரும் பொழுது, நம் எலும்புகளுக்கு வலுவை தருகிறது. இதில் இருக்கும் சத்துக்கள் நம் தசைகளையும், நரம்புகளையும் வழுவாக்கி நரம்பு தளர்ச்சி ஏற்படுவதை போக்கும்.
 
நீரிழிவு நோயாளிகள் முட்டைக்கோசை வாரத்தின் மூன்று முறையாவது சேர்த்து வருவது அவசியம். முட்டைகோஸ் ஏராளமான ஆன்டிஆக்ஸிடண்டுகள் நிறைந்துள்ளன.
 
ஒரு கப் நிறைய முட்டைக்கோஸ் சாப்பிட்டாலே உங்களுக்கு ஒரு நாளிற்கு தேவைப்படுகிற வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை கிடைத்துவிடும். இது நம் உடல் உறுப்புகள் சீராக செயல்படுவதற்கு மிகவும் அவசியமானதாகும்.
 
முட்டைக்கோசில் உள்ள குளுடைமின் எனப்படும் அமினோ அமிலம், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்தும்.
 
முக்கியமாக நாம் உண்ணும் உணவுகளில் உள்ள பல நச்சுக் கழிவுகள் நமது உடல் உறுப்புகளை சேர்ந்து கொள்கின்றன. வாரத்திற்கு ஒரு முறையாவது முட்டைகோஸ் உணவில் சேர்த்து நாம் சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் அறவே நீங்கும்.
 
முட்டைகோஸ் புற்றுநோயை எதிர்த்து போராடும் பொருட்கள் அதிக அளவில் உள்ளன. எனவே இதனை சாப்பிட்டால், புற்றுநோய் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்