எலும்பு தேய்மானம் ஏற்படுவதற்கான காரணங்களும் சில தீர்வுகளும்...!

Webdunia
பொதுவாக ஒருவருக்கு எலும்பு தேய்மானம் இருக்கும் பட்சத்தில் இடுப்பு, தோள், மணிக்கட்டு, முட்டி, முதுகு, கழுத்து உள்ளிட்டவற்றில் திடீரென வலி ஏற்படும். இதற்கு பல காரணங்கள் உள்ளன. 
பரம்பரைக் காரணங்கள், கால்சியம் குறைபாடு, உடற்பயிற்சி இன்றி இருத்தல், எடை அதிகம் இருத்தல், மதுப்பழக்கம் மற்றும் புகைபிடித்தல், வேறு நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகள், முன் கூட்டியே ஏற்படும் மெனோபாஸ், பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் கருப்பை  அகற்றுதல் போன்ற காரணங்களால் எலும்பு தேய்மானம் உண்டாகிறது.
 
உளுத்தம் பருப்பு, கொள்ளு, ராகி, முருங்கை காய் மற்றும் முருங்கை கீரை, வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் கீரை வகைகளில் கால்சியம் சத்து அதிகமாக நிறைந்துள்ளது. இவை அனைத்து எலும்பும் வலுவடைய உதவும் மற்றும் எலும்பு தேய்மானத்தை கட்டுப்படுத்தும்.
 
பெண்களுக்கு மெனோபாஸ் 40 வயதுகளில் வருவதால் அதன் பின்னர் கால்சியம் பற்றாக்குறைக்கு ஆளாகின்றனர். அந்த நேரத்தில் கால்சியம் அதிகம் உள்ள சிக்கன், மட்டன், இறால், முட்டை, மீன் போன்ற உணவு வகைகளை சேர்க்க வேண்டும்.
 
மெனோபாசுக்குப் பின்னர் சோயா பீன்ஸ் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதிக கால்சியம் உடலுக்குக் கிடைக்கும். அத்திக்காயை வேகவைத்து  சிறு பருப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் கை, கால் வலி குணமாகும்.
 
அவுரி இலை, வாதநாராயணன் இலை, பூண்டு, மிளகு அனைத்தையும் எடுத்து அரைத்து தினமும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மூட்டு வாதம், மூட்டு வீக்கம் குணமாகும்.
 
அமுக்காரா, சுக்கு, ஏலக்காய், சித்தரத்தை தலா 100 கிராம் எடுத்து அரைத்து தினமும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் வலி, மூட்டு, இடுப்பு மற்றும் தொடை வலி குணமாகும்.
 
வாரத்தில் மூன்று முறை 15 நிமிடங்களாவது வெயிலில் இருக்க வேண்டும். எலும்புகள் உறுதியிழப்பைத் தடுக்க தினமும் 20 நிமிடம்வாக்கிங்  செல்ல வேண்டியது கட்டாயம். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்