உங்களுக்கு ஒற்றை தலைவலி பிரச்சனை இருந்தால், அந்த நோய் ஏற்படுவதன் காரணத்தை கண்டறிவதன் மூலம், ஒற்றை தலைவலி நோயை நாம் குணப்படுத்தலாம்.
உணவின் அளவை அதிகம் கட்டுப்படுத்துவது, சரியான நேரத்திற்கு உட்கொள்ளாமல் இருப்பது, உடலில் நீர் அளவு குறைவாக இருப்பது, மது அருந்துவது, காபி, டீ, சாக்லேட் மற்றும் பால் கட்டி போன்ற உணவுகள் காரணமாக ஒற்றை தலைவலி ஏற்படுகிறது.
களைப்பு, தூக்கமின்மை, அதிக நேர பயணம், மாதவிடாய் நிறுத்தம் போன்ற உடல் பிரச்சனைகளினாலும் ஒற்றை தலைவலி ஏற்படுகிறது.
பிரகாசமான ஒளி, புகைத்தல், அதிக சத்தம், காலநிலை மாற்றங்கள், தூய காற்றின்மை மற்றும் மருந்துகள் போன்ற காரணமாக ஒற்றை தலைவலி ஏற்படுகிறது.