தினமும் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !!

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (13:07 IST)
நீரிழிவு நோய் வராமல் தடுப்பதில் கறிவேப்பிலை முக்கிய பங்கினை வகிக்கின்றது.


கறிவேப்பிலைக்கு இயற்கையாகவே இரத்த சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்கும் சக்தி உண்டு.

தினம் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலையினை உண்டு வந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும். மேலும் இது உங்கள் இருதய ஆரோக்கியத்தினை பாதுகாக்க உதவும்.

உஷ்ணம், அஜீரணம், வாயு காரணமாக வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருந்தால் கறிவேப்பிலையைச் சுத்தம் பார்த்து, அம்மியில் வைத்து அத்துடன் அந்த அளவில் நான்கில் ஒரு பங்கு சீரகத்தையும் சேர்த்து மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட்டு கொஞ்சம் வெந்நீர் குடிக்க வேண்டும்.

மருந்து தின்ற அரைமணி நேரம் கழித்து தேக்கரண்டியளவு சுத்தமான தேனையும் குடித்து விட வேண்டும். இந்த விதமாக காலை, மாலை இருவேளையாகச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு நின்று விடும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்