பல்வேறு நோய்களுக்கு அற்புத மருந்தாகும் நெல்லிக்காய் !!

சனி, 4 ஜூன் 2022 (13:14 IST)
பெருநெல்லிக்காய் ஊறுகாய் தயாரிக்கவும், மருந்து தயாரிக்கவும் பயன்படுகிறது. இதில் இரும்புச் சத்தும், வைட்டமின் சி-யும் அதிகம் உள்ளன.


நெல்லிக்காயை சாதத்துடன் அடிக்கடிச் சேர்த்து வந்தால் நோய் தடுப்பு மருந்தாகச் செயல்பட்டு உடல் நலத்தைக் காக்கும்.

சுத்தமான தேனில் நெல்லிக்காயைப் போட்டு ஊற வைத்துப் பல நாட்கள் கழித்து எடுத்து தினசரி காலை வெறும் வயிற்றில் சிறிது சாப்பிட்டுப் பாலைக் குடித்தால் வீரிய சக்தி ஏற்பட்டு இளமையை உண்டாக்கும்.

நெல்லியின் இலைக் கொழுந்தை ஒரு கைப்பிடி அளவு எடுத்து வந்து மெழுகாக அரைத்து மோரில் கலந்து குடிக்கக் கொடுத்தால் சீதக்கழிசல் குணமாகும்.

எலும்புருக்கி நோயினால் அவதிப்படுகிறவர்கள் ஒரு தேக்கரண்டி நெல்லிச் சாறுடன் ஒரு தேக்கரண்டி சுத்தமான தேன் சேர்த்து தினசரி காலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலனைப் பெறலாம்.

நெல்லிக் காயைத் துவையல் செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாந்தி, ஒக்காளம், சுவையின்மை போன்ற குறைபாடுகள் குணமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்