கத்திரிக்காயை அடிக்கடி சாப்பிடுவதால் என்ன நன்மைகள் !!
திங்கள், 6 ஜூன் 2022 (09:35 IST)
கத்திரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. இதனால் இதய சம்மந்தமான நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
கத்தரிக்காயின் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஃப்ரீ ராடிக்கல்ஸ்களிடமிருந்து நமது செல்கள் சேதமடையாமல் பாதுகாக்கும்.
கத்தரிக்காயில் பைட்டோ-நியூட்ரியன்ட்ஸ் உள்ளதால், நமது மூளையின் செயல் திறனை அதிகரிக்க உதவுகின்றன. மேலும் நல்ல நினைவாற்றலையும் தருகின்றது.
நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு இரத்ததில் இரும்புச்சத்து சரியான அளவில் இருப்பது அவசியமாகும். கத்திரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வருபவர்களுக்கு உடலில் அதிகமாக சேர்ந்துள்ள இரும்புச்சத்தை குறைக்க உதவுகிறது.
கத்திரிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே கத்திரிக்காயை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.
கத்திரிக்காயில் கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தள்ளன. இவை நமது சருமத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி சருமத்தை பொலிவாக வைக்க உதவுகிறது. கத்தரிக்காய் தோலில் அன்தோசையனின் என்ற பொருள் உள்ளது. இது நமது சருமத்தை இளமையாக பராமரிக்க உதவுகிறது.