மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

Mahendran

வெள்ளி, 15 நவம்பர் 2024 (18:59 IST)
மழைக்காலத்தில் வெந்நீர் குடிப்பதால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது. 
 
மழைக்காலம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஜலதோஷம், சளி, இருமல் ஆகியவை பாதிக்கப்படும் என்பதால் வெந்நீர் தவறாமல் குடித்தால் இந்த பிரச்சனை வராமல் தடுக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.
 
வெந்நீரை குடித்தால் அதிலிருந்து வெளிப்படும் நீராவியை மூக்கு துவாரங்கள் வழியாக ஆழமாக உள்ளிழுக்க வேண்டும். அந்த நீரை பருகினால் சைனஸ், தொண்டை பகுதியில் சூழ்ந்திருக்கும் சாலைகளுக்கு இடம் அளிக்கும்.
 
வெந்நீர் குடித்தால் வயிறு, குடல் வழியாக அந்த நீர் செல்லும்போது உடல் கழிவுகளை அகற்றுவதற்கு துணை புரியும். மேலும், செரிமானத்திற்கும் உதவும். நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டையும் மனநிலையையும் வெந்நீர் குடிப்பதால் மேம்படுத்தலாம் என்று ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
வெந்நீர் குடிப்பதால் மலச்சிக்கல் போகும் என்றும் உடலில் நீர் ஏற்றத்தை தக்க வைப்பதற்கும், குடல் இயக்கங்களை சீராக வைத்துக் கொள்ளவும் உதவும்.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்