நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகளை சரிசெய்யும் அதிமதுரம் !!

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (12:27 IST)
அதிமதுரத்திற்கு  அதிங்கம், மதுங்கம்,ஆட்டி ஆகிய வேறு பெயர்களும் உண்டு. இனிப்பு சுவை அதிகம் இருப்பதால் ‘அதிமதுரம்’, ‘மது’கம் போன்ற பெயர்களும் உண்டு.


ஒரு வயதிற்கு மேல் உள்ள  குழந்தைகளுக்கு சளி,இருமல் தொல்லை வராமல் அதிமதுரம் பயன்படுத்துவதன் மூலம் கட்டுக்குள் வைக்கலாம்.    

அதிமதுரம் பொடி கலந்த நீரை குழந்தைகளுக்கு அடிக்கடி தருவது நல்ல பலன் தரும். நியாபக சக்தியை அதிகரிக்கவும், உடல் வளர்ச்சிக்கும் பயனுள்ளதாய் இந்த மூலிகை இருக்கும்.

அதிமதுரம் தூள்  கலந்த நீரை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் பருகி வந்தால் மூட்டு வலிகள் நீக்கும். உடலின் வாதத்தன்மை அதிகரிப்பை கட்டுக்குள்  கொண்டு வரும். சிறுநீரகங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

அதிமதுரம் தூள் ஊறவைத்து பருகி வருவதால் மூட்டு வலி இருக்காது. அதிமதுரம்  இருமல் நீக்கி மருந்தாக  செயல்படுகிறது .இதனால் இருமலின் அறிகுறி முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. வறண்ட தொண்டையை பாதுகாக்கவும் உதவுகிறது.

அதிமதுரத்தை பாலில் கலந்து முகத்திற்கு பேக் போடுவதால் சருமம் பிரகாசமாகும். அதிமதுர டீ ஆனது வயிறு சிக்கல்கள், நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல் போன்றவற்றை நீக்குகிறது.

அதிமதுரம் ஒருவர் தொடர்ந்து அதிமதுர டீ  சில நாட்கள் குடித்து வந்தால், நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் இருந்து விடப்படும். அதற்கு 1 டம்ளர் சுடு நீரில் 1 டீஸ்பூன் அதிமதுரம் பொடி சேர்த்து கலந்து, 10 நிமிடம் மூடி வாய்த்த பின் தேன் கலந்து குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால் நுரையீரல் சுத்தமாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்