திராட்சை பழத்தை சாப்பிட்டு வருவதால் என்ன நன்மைகள் தெரியுமா...?

வெள்ளி, 8 ஜூலை 2022 (10:25 IST)
திராட்சை பழங்கள் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே போன்ற சத்துக்களை அதிகம் கொண்டது. மேலும் கால்சியம், ரைபோபிளவின், மெக்னீசியம் போன்ற சத்துகளும் அதிகம் கொண்டவையாகும்.


இந்த சத்துக்கள் அனைத்தும் உடலின் எலும்புகள், பற்கள் போன்றவற்றின் உறுதித்தன்மைக்கும், ரத்தக்காயம் ஏற்படும் போது ரத்தம் வேகமாக குறையவும் உதவுகிறது.

திராட்சையில் கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என்று பல வகைகள் உள்ளது.

ஜீரண கோளாறு இருப்பவர்கள் திராட்சை பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வுகிடைக்கும்.  திராட்சைபழத்தை சாப்பிட்டு வந்தால் பித்தம் நீங்கும், இரத்தம் தூய்மை பெரும், இதயம், கல்லீரல், மூளை , நரம்புகள் வலுப்பெறும்.

பசி இல்லாதவர்கள் அடிக்கடி திராட்சை பழத்தை சாப்பிட வேண்டும். அது நன்றாக பசியை தூண்டிவிடும். மேலும் குடல் கோளாறுகளை சரி செய்யும். திராட்சைபழ சாற்றை வெந்நீரில் கலந்து குடித்து வர நாவறட்சி நீங்கும்

உலர்ந்ததிராட்சையை வெந்நீரில் போட்டு ஊற வைத்துபருகினால் மயக்கம் குணமாகும். பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கும், உடல் அசதிக்கும் திராட்சை நல்ல பலனை கொடுக்கும்.

தூக்கம் இல்லாமல் அவதிப்படுவோருக்கு திராட்சை அருமையான மருந்து. இரத்த சோகை, மலசிக்கல், சிறுநீரககோளாறு, அஜீரண கோளாறுகளை சரிசெய்யும் சக்தி திராட்சை பழத்திற்கு உண்டு.

திராட்சைபழத்தை சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்யும். உடல்எடையும் கணிசமாக அதிகரிக்கும். எனவேமெலிந்த  உள்ளவர்கள் திராட்சை பழத்தை சாப்பிடலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்