நீண்ட பட்டினி, அதிக உணவு, உடலுக்கு ஒவ்வாத உணவு இவற்றால் ஏற்படும் அஜீரணக் கோளாறு அனைத்தையும் தீர்க்கும் குணம் இளநீருக்கு உண்டு.
குழந்தைகளுக்கு கொடுத்தால் இதிலுள்ள சத்துக்கள் எலும்புகளுக்கும், உறுப்புகளுக்கும் வலுகொடுக்கும். உடல் வளர்ச்சி சீராக இருக்கும். குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்களைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
அம்மை நோயின் தாக்கம் கண்டவர்கள் இளநீர் அருந்தினால் நோயின் வீரியம் குறையும். நாவறட்சி, தொண்டைவலி நீங்கும். சிறுநீர் பெருக்கியாகவும், சிறுநீரகம் சீராக இயங்கவும், இளநீர் உதவுகிறது. சிறுநீரக கல்லடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.