எளிதில் கிடைக்கும் பனங்கற்கண்டின் அற்புத மருத்துவ பயன்கள் !!

Webdunia
வேர் முதல் நுனிவரை பனையின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பயன் தருபவை. பனங்கற்கண்டு, வாதம், பித்தம் நீக்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். நுரையீரல்  மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது. 

தமிழகத்தில், பனை மரத்தின் வெல்லத்தை இரு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை கருப்பட்டி என்பர். இதை  சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாக்குவது சர்க்கரை, பனங்கற்கண்டு எனப்படும்.
 
பாலில், பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால், மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், நீர் சுருக்கு, காய்ச்சலால் ஏற்படும் வெப்பம் இவற்றுக்கு நல்லது. பனை நீரிலுள்ள சீனி சத்து, உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. 
 
இதிலிருக்கும் கால்சியம், பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு, பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது. இதிலிருக்கும் இரும்புச்சத்து, பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன், கண் நோய், ஜலதோஷம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.
 
பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை நீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டி, எந்த கலப்படமும் இல்லாமல் இயற்கையாக கிடைக்கும் இனிப்பாகும். நாட்டு மருந்து தயாரிப்புக்கு கருப்பட்டி பயன்படுத்தப்படுகிறது. கருப்பட்டி, ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேனிக்கு பளபளப்பை தரும்.
 
கரும்பு சர்க்கரைக்கு பதில், கருப்பட்டியை பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை, இதை சாப்பிடலாம். நமக்கு  தேவையான கால்சியம், இதில் கிடைக்கிறது. 
 
சுக்கு கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு ஏற்றது. சுக்கு, மிளகு கலந்த கருப்பட்டியை, குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால், பால் நன்றாக சுரக்கும். குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்