உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும் தேன் !!

தேனில் நமது ரத்தத்தில் இருக்கும் அணுக்களுக்கு புத்துணர்வை அளிக்கும் சக்தி நிறைந்துள்ளது. மேலும் நரம்புகளை பலப்படுத்தி மூளையின் செயல்பாடுகள் வேகம் பெற உதவுகிறது. 

இருமலுக்கு தேன் ஒரு மிகச்சிறந்த மருந்து. கால் டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேனைக் கலந்து கொடுத்தால், இரவில் வரக்கூடிய இருமலைக் கட்டுபடுத்துவதோடு, அதன் வீரியத்தையும் குறைக்கும். மேலும் ஆழ்ந்த உறக்கத்தையும் தரவல்லது.
 
நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி, புற்றுநோயை தடுக்கும் சக்தியினை தேன் உடலுக்கு வழங்குகிறது. புற்றுநோய் செல்களின் பருக்கத்தைத் தடுத்து நிறுத்தும் அற்புத ஆற்றல் தேனுக்கு உண்டு.
 
தேனை அனைவரும் தினந்தோறும் சிறிதளவு சாப்பிட்டு வருவதால் மூளை புத்துணர்ச்சி பெறும். ஞாபகத்திறனும் அதிகரிக்கும். கிரீன் டீயில் சிறிதளவு தேன்  கலந்து தினமும் பருகி வருபவர்களுக்கு பொடுகு தொல்லை கூடிய விரைவில் நீங்கும். தலைமுடியின் பளபளப்பு தன்மையும் அதிகரிக்கும்.
 
தேன் உடலுக்கு தேவையான பல விதமான தாதுக்கள் இன்ன பிற சத்துக்களை அதிகம் கொண்டது இதை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.  சுறுசுறுப்பு தன்மை கூடும். உடல் அழகான தோற்றம் பெறும். குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் போன்றோருக்கு தேன் ஒரு சிறந்த ஊட்டச்சத்து மிகுந்த  உணவாக இருக்கும்.
 
தினமும் இரவு தூங்க செல்லும் முன்பு இளம் சூடான பசும்பாலில் சிறிது தேனை கலந்து பருகி வந்தால் தூக்கமின்மை பிரச்சனை நீங்கும். அடிக்கடி விழிப்பு ஏற்படாத ஆழமான தூக்கம் ஏற்படும்.
 
சிறிதளவு தேனை தினமும் சாப்பிட்டு வருபவர்களுக்கு எந்த வகையான ஒவ்வாமை பிரச்சனைகள் இருந்தாலும் அது நீங்கும். இளம் சூட்டில் வெந்நீருடன்  எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை சேர்த்து அருந்தினால், வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி போன்ற பிரச்சினைகள் சரியாகும்.
 
காலை உணவிற்குப் பின் தினமும், மாதுளம் பழச்சாறுடன், தேன் கலந்து சாப்பிட்டால் உடலில் ஆரோக்கியம் உண்டாகும். புது ரத்தமும் உற்பத்தியாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்