கருகருவென்று அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் அற்புத குறிப்புகள் !!

தலை முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும். 

சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர  முடிவளரும். புழுவெட்டு மறைய நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும். 
 
ஒரு கப் தேங்காய்த் துருவலை அரைத்து பால் பிழிந்து வடித்து எடுத்துக் கொள்ளவும். இதை முடியின் மயிர்க்கால்களுக்குத் தடவ வேண்டும். அரை மணி நேரம்  ஊறவைத்து , பின் தலைக்குக் குளிக்க வேண்டும். இதை வாரம் ஒரு முறை என்ற அளவில் தொடர்ந்து செய்து வர முடி கருகருவென்று அடர்த்தியாக வளரத்  தொடங்கும்.
 
முடி கருப்பாக ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும். காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.
 
தலை முடி அடர்த்தியாக வளர எண்ணெய் காயவைத்த செம்பருத்தி பூ மற்றும் ஆலமரத்தின் வேரைப் பொடி செய்து தேங்காய் எண்ணெய்யில் ஊறவைத்து தலைக்கு தேய்த்து வந்தால் கூந்தல் கருமையாக வளரும்.
 
தேவையான அளவு சிறிய வெங்காயங்களை உரித்து வைத்துக் கொள்ளவும். இவற்றை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.இந்த  விழுதைப் பிழிந்து சாற்றைத் தனியாக வடித்து எடுத்து தலை மற்றும் முடிக்குப் பூசவும். இந்த வழியை மாதம் 1 முதல் 2 தடவைகள் பின்பற்றுவது நல்ல  பலனைத் தரும். வெங்காயத்தில் உள்ள சல்பர் முடி வளர்ச்சியைத் தூண்டும் தன்மை கொண்டது. 
 
கற்றாழை எண்ணெய் தலைமுடி நன்கு வளர இகவும் பயன்படுகிறது. அதேபோல் இளநரை உள்ளவர்கள் இந்த கற்றாழை எண்ணெய்யை தினமும் தேய்த்து வர  நரை முடி கருமையாக மாறிவிடும். கற்றாழையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தலைமுடி நன்கு வளர மிகவும் உதவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்