நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் !!

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (10:19 IST)
நாவல் பழத்தில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று உருண்டை ரகம் இன்னொன்று நீள ரகம். இதில் நீள வடிவில் உள்ள பழத்தில் இனிப்புச் சுவை அதிகம்.


சிலருக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும். அவர்கள் நாவல் பழத்தின் விதைகளை இடித்து எடுக்கப்பட்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் சிறுநீர் போக்கு குறையும்.

நாவல் பழச் சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்து விடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம்.

நாவல் பழத்தின் விதைகளை காய வைத்து இடித்து பொடியாக வைத்துக் கொள்ள வேண்டும், ஒரு தடவைக்கு 3 கிராம் வீதம் நான்கு வேலைகள் தண்ணீரில் கலந்து இந்தத் தூள் உட்கொண்டால் சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறையும்.

மூலம் தொந்தரவு உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த தொந்தரவில் இருந்து விடுபட நாவல் பழம் உதவுகிறது.

பழம் அதிகம் விளையும் காலத்தில் தினசரி இரண்டு அல்லது மூன்று பழங்களை உப்புச் சேர்த்து அல்லது தேன் சேர்த்து காலையில் சாப்பிட வேண்டும். இப்படி தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை சாப்பிட்டால் மூல நோய் முற்றிலும் குணமாகும்.

நாவல் பழத்தை குழந்தைகள் உட்பட அனைத்து வயதினரும் அளவுடன் தான் பயன்படுத்த வேண்டும். பழத்தையோ, பழச்சாற்றையோ வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது. அதேபோல் நாவல் பழம் சாப்பிட்ட உடனே பால் அருந்த கூடாது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்