பாகற்காயை ஜூஸ் போட்டு குடித்தால், குடலில் உருவாகும் புழுக்கள், ஒட்டுண்ணிகளைக் கொல்ல உதவும். ஒவ்வாமை, வீக்கம், கட்டிகளையும் பாகற்காய் நீக்கும்.
பாகற்காயுடன் இஞ்சி, வெந்தயம், சோம்பு சேர்த்து கடுகு எண்ணெயில் சமைத்து சாப்பிட்டால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
தினமும் ஒரு கப் பாகற்காய் ஜூஸ் குடித்துவர, கல்லீரல் பிரச்னைகள் நீங்கும்.
சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் அது தொடர்பான உறுப்புக்கள் அனைத்தையும் சிறப்பாக பாதுகாக்க பாகற்காய் உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்கவும் பாகற்காய் பயன்படுகிறது. வாரம் ஒருமுறை பாகற்காய் சமைத்து சாப்பிட்டு வர சிறுநீரகத்திற்கு நல்லது.