சொமேட்டோவிடம் பலூன் வேண்டும் என கேட்ட குழந்தை: அன்பு பரிசு அனுப்பிய சொமேட்டோ

Webdunia
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (21:45 IST)
பலூனும், கார் பொம்மையும் வேண்டும் என கேட்ட குழந்தைக்கு ஒரு அன்பு பரிசை அனுப்பியுள்ளது சொமேட்டோ நிறுவனம்.

சொமேட்டோ உணவு டெலிவரி ஆப்-ல், இர்ஸாட் தஃப்டாரி என்பவர் உணவு ஆர்டர் செய்துள்ளார். உடனே ஆர்டர் செய்யப்பட்ட உணவு, டெலிவரி செய்யப்படும் என அவரின் தொலைப்பேசிக்கு குறுந்தகவல் வந்துள்ளது. அந்த குறுந்தகவலை பார்த்த அவரின் 4 வயது மகன், தனக்கு பொம்மை கார், மற்றும் பலூன் வேண்டும் என அந்த குறுந்தகவலுக்கு பதில் தகவல் அனுப்பியுள்ளார்.

இதை பார்த்த இர்ஸாட், தனது மகன் சொமேட்டொவிற்கு அனுப்பிய குறுந்தகவலை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில், “எனது 4 வயது மகன், நான் சொமேட்டோவில் ஆர்டர் செய்வதை பார்த்து, இவர்கள் எதை கேட்டாலும் தருவார்கள் என நினைத்து கார் பொம்மையும், பலூனும் கேட்டுள்ளான்” என பகிர்ந்தார். அந்த பதிவை பலரும், “@ZomotoIN” என டேக் செய்து பகிர்ந்தனர். இவ்வாறு பலரும் பகிர்ந்ததால் இந்த பதிவு சொமேட்டோ நிறுவனத்தின் பார்வைக்கு வந்தது.

அதை தொடர்ந்து சொமேட்டோ நிறுவனம், ஆச்சரியப்படுத்தும் விதமாக அந்த 4 வயது சிறுவனுக்கு, பொம்மை கார் ஒன்றை அன்பு பரிசாக வழங்கியுள்ளது. இது குறித்து இர்ஸாட், தனது டிவிட்டர் பக்கத்தில், ”எனது 4 வயது மகன், அவனது 8 மாத தங்கையுடன் அந்த காரை வைத்து சந்தோஷமாக விளையாடி வருகிறான், சொமேட்டோவின் அன்புக்கு நன்றி” என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் டெலிவரி செய்தவர் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பதற்காக உணவை வாங்க மறுத்து, வேறு நபரை அனுப்புமாறு சொமேட்டோவிற்கு கோரிக்கை வைத்த நபருக்கு “உணவிற்கு மதமில்லை, உணவே ஒரு மதம் தான்” என சொமேட்டோ நிறுவனம் பதிலடி தந்தது. இந்நிலையில் தற்போது 4 வயது சிறுவனுக்கு அன்பு பரிசு அனுப்பிய செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்