ஜொமைட்டோ உணவை கேன்சல் செய்தவருக்கு தஸ்லிமா நஸ்ரினின் சாட்டையடி கேள்வி!

வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (20:59 IST)
சமீபத்தில் ஜொமைட்டோவில் உணவு ஆர்டர் செய்த அமித் சுக்லா என்பவர் தனது உணவை ஒரு இந்து மட்டுமே டெலிவரி செய்ய வேண்டும் என்றும், இந்து அல்லாதவர் டெலிவரி செய்தால் அந்த உணவை தான் ரத்து செய்யப்போவதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த ஜொமைட்டோ, 'உணவுக்கு மத பாகுபாடு இல்லை என்றும் உணவே மதம் என்றும் கூறி ஆர்டரை ரத்து செய்தால் அதற்குரிய பணம் திரும்ப தரப்படாது என்று பதிலளித்தது
 
ஜொமைட்டோ  நிறுவனத்தின் இந்த பதிலுக்கும், அமித் சுக்லாவின் அதிரடிக்கும் ஆதரவு எதிர்ப்பு ஆகியவை மாறி மாறி கிடைத்து வந்தன. குறிப்பாக ஜொமைட்டோ நிறுவனத்தின் செயலியை லட்சக்கணக்கானோர் அன்இன்ஸ்டால் செய்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
இந்த நிலையில் எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலருமான தஸ்லிமா நஸ்ரின் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜொமைட்டோ உணவை ரத்து செய்த அமித் சுக்லாவுக்கு ஒரு அதிரடி கேள்வியைக் கேட்டுள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு தான் டுவிட்டரில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்த போது இதே அமித் சுக்லாதான் ஒரு ஆபாசமான கேள்வி ஒன்றைக் கேட்டதாகவும், தான் ஒரு இந்து அல்லாத பெண் என்பதால் தான் அவ்வாறு இவர் தரக்குறைவான கருத்தை பதிவு செய்தாரா? என்றும் சாட்டையடி கேள்வி ஒன்றை கேட்டுக்கொண்டார். தஸ்லிமா நஸ்ரினின் இந்த கேள்விக்கு ஆதரவு குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Is it the man who cancelled Zomato order for being assigned a non-Hindu delivery boy? He has no respect for women? Or he showed his disrespect to me because i am a non-Hindu? pic.twitter.com/PS8tBICGU4

— taslima nasreen (@taslimanasreen) August 2, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்