தொடரும் கனமழை.. 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

Webdunia
புதன், 11 அக்டோபர் 2023 (07:21 IST)
தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் அவ்வப்போது மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வரும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் அம்மாநிலத்தில் உள்ள மூன்று மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து வரும் பகுதிகளான எர்ணாகுளம், இடுக்கி மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  வடகிழக்கு பருவமழை அக்டோபர் மூன்றாவது வாரம் தொடங்கும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவ மழைக்கான அறிகுறி கேரளாவில் தோன்றி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவை அடுத்து தமிழகத்திலும் வடகிழக்கு பருவமழை விரைவில் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்