ஜிஎஸ்டியை அகற்ற வேண்டும், அல்லது அரசை அகற்ற வேண்டும்: பாஜக மூத்த தலைவர்

Webdunia
ஞாயிறு, 6 மே 2018 (07:37 IST)
பாஜக அரசு மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் கடும் அதிருப்தியில் இருப்பவர் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா என்பது தெரிந்ததே.  குறிப்பாக முன்னாள் நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா, பிரதமர் மோடியின் ஜிஎஸ்டியை கடுமையாக எதிர்த்து வந்தார்.
 
இந்த நிலையில் நேற்று வணிகர் சங்க பெரவை மாநாட்டில் பேசிய யஷ்வந்த் சின்ஹா, 'ஜிஎஸ்டியால் வணிகர்களுக்கும், மக்களுக்கும் இன்னல்களை தருகிறது மத்திய அரசு. ஜிஎஸ்டியை அகற்ற வேண்டும், இல்லையெனில் மக்களும், வணிகர்களும் ஒன்றிணைந்து அரசை அகற்ற வேண்டும் என்று ஆவேசமாக பேசியுள்ளார். இதனால் பாஜக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
சமீபத்தில் சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்த யஷ்வந்த் சின்ஹா, காங்கிரஸ், பாஜக அல்லாத 3வது அணிக்கு ஆதரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. எனவே விரைவில் யஷ்வந்த் சின்ஹா தனிக்கட்சி ஆரம்பிப்பார் என்றும் அந்த கட்சியில் சத்ருஹன்சின்ஹா உள்பட பல அதிருப்தி பாஜக பிரமுகர்கள் இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்