உதவி என அழைத்த பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி !

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (15:45 IST)
கொரோனாவால் பாதித்த குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவிக் கேட்டு டுவிட்டர் செல்போன் எண்ணைப் பகிர்ந்த பெண்ணுக்கு ஆபாச குறுஞ்சி அனுப்பிய வீடியோ செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவிவருகிறது. இந்தியாவிலும் இந்தத் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதைக்குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில் கொரொனா பரவலைக் கடுப்படுத்த மக்கள் கூடும் பொது இடங்களில் அரசு பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரொனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவால் பாதித்த குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவிக் கேட்டு டுவிட்டர் செல்போன் எண்ணைப் பகிர்ந்த பெண்ணுக்கு  சில ஆண்கள் ஆபாச குறுஞ்சி அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து அப்பெண் கூறும்போது, உயிருக்கு ஆபத்தான தொற்றின்போது, இக்கட்டான தருணத்தில் உதவி கேட்கும்போது கூட இந்த மாதிரி இழிவான செயல் செய்வது அருவருப்பை ஏற்படுத்துவதாகப் புகார் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்