படுக்கையறையில் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட தம்பி: அதிர்ச்சியில் அண்ணன்

Webdunia
ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2017 (07:55 IST)
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பஞ்சவட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விகாஸ்குமார். இவர் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி மற்றும் தம்பியுடன் தங்கியிருந்தார்



 
 
இந்த நிலையில் விகாஸ் ஒரு வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட்டு திரும்பியபோது மனைவியும், தம்பியும் தற்கொலை செய்திருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். மனைவி விஷம் குடித்தும் தம்பி தூக்கில் தொங்கியதையும் பார்த்து விகாஸ் கதறி அழுதார்.
 
படுக்கையறையில் மனைவி, தம்பி ஆகிய இருவரும் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் புதிராக உள்ளதாக அந்த பகுதியில் தெரிவித்தனர். இதுகுறித்து நாசிக் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்