ரஷ்யா மற்றும் ஜப்பானை தொடர்ந்து, தற்போது அமெரிக்காவிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தச் சூழலில், லாஸ் ஏஞ்சல்ஸ் நிர்வாகம் தனது அறிவிப்பில், கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற வேண்டும் என்றும், யாரும் கடலுக்குள் அல்லது கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.