50 நாட்களில் ரூ.14 லட்சம் கோடி: மோடியின் கணக்கு!!

Webdunia
புதன், 9 நவம்பர் 2016 (15:54 IST)
உலகம் முழுவதும் இந்திய நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகள் சுமார் 14 லட்சம் கோடி அதாவது 217 பில்லியன் டாலர் அளவிலான தொகை புழக்கத்தில் உள்ளது. 


 
 
இப்படி இருக்கும்போது பிரதமர் நரேந்திர மோடி, இந்திய நாணயங்களில் அதிக மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என அறிவித்துள்ளார். அடுத்த 50 நாட்களுக்குள் இதை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மாற்றிக்கொள்ள வேண்டும் என உத்திவிட்டுள்ளார்.
 
தற்போது 500 ரூபாய் நோட்களாக 7.85 லட்சம் கோடி, 1,000 ரூபாய் நோட்டுகளாக 6.33 லட்சம் கோடி ஆக மொத்த 14.18 லட்சம் கோடி ரூபாய் உலகளவில் புழக்கத்தில் உள்ளது. 
 
மோடி தலைமையிலான மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின் மூலம் கருப்ப பணம் வைத்திருக்கும் தனிநபர்களுக்கு இது மிகப்பெரிய சிக்கலாக மாறும். 
 
ஒரு நாளுக்கு ரூ.4,000 முதல் ரூ.60,000 வரையிலான பணத்தை மாற்றிக்கொள்ளலாம். இந்தக் கட்டுப்பாடு நவம்பர் 24ஆம் தேதி வரைதான். இதன் பின் இதன் கட்டுப்பாடு தளர்க்கப்படும். நவம்பர் 10-24 நாட்கள் ஒருவர் இந்த 15 நாட்களுக்குள் 9 லட்சம் வரையிலான தொகையை மாற்ற முடியும்.
 
கடந்த சில வருடங்களாகப் பணத்திற்காக ஒட்டு போடுவது அதிகளவில் உருவாகியுள்ளது. தேர்தல் காலங்களில் 1000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகளவில் இருப்பதாக மத்திய அரசு கண்டுபிடித்துள்ளது. இதனைத் தடுக்கும் விதமாக மத்திய அரசு இப்புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 
இந்தியாவில் 2011-2016 வரையிலாகக் காலத்தில் ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் 500 ரூபாய் நோட்டுகள் 76 சதவீதமும், 1,000 ரூபாய் நோட்டுகள் 109 சதவீதம் அளவிலான புழக்கம் அதிகரித்துள்ளது. 
 
மோடியின் கூறும் வகையில் பணத்தை மாற்ற 50 நாட்கள் மிகவும் குறைவாக இருந்தாலும், வேறு வழியின்றி இதை செய்து தான் ஆகவேண்டும்.
அடுத்த கட்டுரையில்