மனைவி கள்ளக்காதலுடன் ஓடிபோனதால் மாமனாரை சுட்டுக்கொன்ற மருமகன்...! அதிர்ச்சி சம்பவம்..!

Webdunia
வியாழன், 30 மார்ச் 2023 (18:25 IST)
மனைவி கள்ளக்காதலனுடன் ஓடிப் போன ஆத்திரத்தில் மாமனாரை சுட்டுக் கொன்ற மருமகனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் மனைவி கள்ளக்காதலுடன் அவுரங்காபாத் நகருக்கு ஓடி விட்டதாக தெரிகிறது.
 
இதனால் ஆத்திரமடைந்த அவர் தன் மாமனாரின் வீட்டுக்கு சென்று சண்டை போட்டு உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதை அடுத்து மறைத்து வைத்த துப்பாக்கி எடுத்து மாமனாரை சுட்டு கொலை செய்தார்
 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. இதனை அடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் போலீசருக்கு தகவல் கொடுத்த நிலையில் மாமனாரை சுட்டு கொன்றுவிட்டு தப்பி ஓடிய மருமகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மனைவி கள்ளக்காதலனுடன் ஓடிப்போன ஆத்திரத்தில் மாமனாரை சுட்டுக் கொன்ற நபரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்