சரத்பவாரின் திடீர் பின்னடைவுக்கு காரணம் இதுதானா? அமித்ஷாவின் அதிரடி ஆட்டம்

Webdunia
செவ்வாய், 19 நவம்பர் 2019 (22:02 IST)
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு முதலில் சம்மதம் தெரிவித்த சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, கடைசி நேரத்தில் திடீரென பின்வாங்கி உள்ளது மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் நீடிக்க வைத்துள்ளது 
 
மகாராஷ்டிராவில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாததை அடுத்து அங்கு தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிவசேனா தலைமையிலான ஆட்சியை அமைக்க சரத்பவார் மற்றும் காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டதாகவும், இதனை அடுத்து மூன்று கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கவர்னரை சந்தித்து இதுகுறித்து தகவல் தெரிவிக்க இருப்பதாகவும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் திடீரென சிவசேனா கட்சி ஆட்சிக்கு ஆதரவு தர சரத்பவார் பின்வாங்கியதாக தெரிகிறது. இதன் பின்னணியில் அமித்ஷா பேசிய பேரம் இருந்ததாகவும், சரத் பவாரை அடுத்த ஜனாதிபதியாக்க அமித்ஷா ஒப்புக்கொண்டதாகவும் அதற்கு பதிலாக பாஜக தலைமையிலான ஆட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தரவேண்டும் என பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது
 
ஜனாதிபதி பதவி என்ற துருப்புச்சீட்டு காரணமாக சரத்பவார் உடனடியாக சிவசேனா கட்சிக்கு ஆதரவு கொடுப்பதில் இருந்து பின்வாங்கி விட்டதாகவும், விரைவில் பாஜக தலைமையிலான ஆட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட இந்த திடீர் திருப்பத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்