இந்தியாவில் நோய் தீர்க்கும் மருந்துகளே இல்லை; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Webdunia
புதன், 29 நவம்பர் 2017 (13:23 IST)
இந்தியா போன்ற நடுத்தர வருவாய் உள்ள வளரும் நாடுகளில் 10 மருந்துகளில் ஒன்று தரக்குறைவானது அல்லது போலியானவை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


 
இந்தியா போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட வளரும் நாடுகளில் விற்பனையாகும் மருந்துகள் குறித்து உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சியளிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,
 
விற்பனை செய்யப்படும் 10 மருந்துகளில் ஒன்று தரக்குறைவானது அல்லது போலியானவை. இந்த மருந்துகள் நோய்களை குணப்படுத்தவோ அல்லது தடுக்கவோ தவறி விடுகின்றன. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மலேரியா மற்றும் நிமோனியா போன்ற நோய்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் இழப்பிற்கு காரணமாகவும் உள்ளது.
 
தரக்குறைவான மற்றும் போலியான மருந்துகள் குறிப்பாக மிகவும் பாதிக்கப்பட்ட சமூகங்களை பாதிக்கின்றன. மலேரியாவுக்கு எதிரான மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் ஆகியவற்றில் சுமார் 65% போலியான மருந்துகள். வளர்ந்த நாடுகளில் கிடைக்கும் மருந்துகள் தரமானதாக இருந்தாலும் அது நோய்களை குணப்படுத்துவது இல்லை.
 
15 ஆண்டுகளுக்கு பிறகு உலகளாவிய மருந்துகள் விற்பனை முதல் தடவையாக 500 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது.
 
இவ்வறு உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
கடந்த நான்கு ஆண்டுகளில் உலக சுகாதார அமைப்பு புற்றுநோய் மருந்துகள் முதல் கருத்தடை மருந்துகள் வரை, நுண்ணுயிர் எதிப்பிகள் முதல் தடுப்பூசிகள் வரை எல்லாவற்றையும் உள்ளடக்கி அனைத்து சிகிச்சை பிரிவுகளிலும் தரக்குறைவான அல்லது போலியான மருந்துகள் பற்றிய அறிக்கையை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்