காலாவதியான பேருந்துகள்: இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்

செவ்வாய், 28 நவம்பர் 2017 (15:37 IST)
இந்தியாவிலேயே அதிக அளவில் காலாவதி பேருந்துகளை இயக்கும் நகரம் எது என்பது குறித்த பட்டியல் சமீபத்தில் எடுக்கப்பட்டது. இந்த பட்டியலில் துரதிஷ்டவசமாக சென்னை முதலிடம் பிடித்துள்ளது.
 
சென்னை நகரில் உள்ள மாநகர பேருந்துகளில் 73% காலாவதி பேருந்துகள் என்றும், இதனால் அதிக விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அந்த பட்டியலுடன் கூடிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் கடந்த 2009 முதல் 2016 வரையிலான ஆண்டுகளில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையை அடுத்து காலாவதியான பேருந்துகளை அதிகம் இயக்கும் போக்குவரத்து கழகங்கள் பட்டியலில் அகமதாபாத், மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, சண்டிகர், புனே ஆகியவை இடம்பெற்றுள்ளன.
 
ஒரு மாநகர பேருந்தின் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் என்ற நிலையில் சென்னையில் பெரும்பாலான பேருந்துகள் 7 ஆண்டுகளையும் கடந்து ஓடுவதால் உடனடியாக புதிய பேருந்துகளை சென்னை போக்குவரத்து கழகம் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்