அமெரிக்கா கொடுத்த ‘தேர்தல் உதவி நிதி’ எங்கே? மத்திய அரசு அளித்த விளக்கம்!

Prasanth Karthick

திங்கள், 24 பிப்ரவரி 2025 (09:22 IST)

இந்தியாவில் தேர்தல் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா வழங்கிய கூறப்பட்ட நிதி என்ன ஆனது என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

 

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா வழங்கி வரும் 21 மில்லியன் டாலர்கள் நிதியை நிறுத்துவதாக அறிவித்தார். மேலும் இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த இந்த பணம் பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறிய நிலையில், இதுத்தொடர்பான காங்கிரஸ், பாஜக ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் அமெரிக்காவிடம் பெற்ற நிதியின் செலவு குறித்து மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் 2023-24 நிதியாண்டில் அமெரிக்காவின் USAID உடன் இந்திய அரசு இணைந்து 750 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் 7 திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது.

 

விவசாயம், உணவு பாதுகாப்பு திட்டங்கள், குடிநீர், சுகாதாரம், எரிசக்தி, பேரிடர் மேலாண்மை, காலநிலை திட்டங்கள் மற்றும் புதுமை திட்டங்களுக்காக இந்தியா  USAID-டம் இருந்து ரூ.825 கோடி நிதி பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிதியில் எதுவும் தேர்தல்கள் மற்றும் வாக்கு சதவீத அதிகரிப்பு தொடர்பான திட்டங்களுக்கு செலவிடப்படவில்லை என்றும் நிதி அமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்