பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மற்றும் சசிகலா ஆகியோரின் சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் இருவரும் ஒரே காரில் பசும்பொன் வந்த நிலையில், வழியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனையும் சந்தித்து பேசினர். பின்னர் மூவரும் இணைந்து தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இவர்களை தொடர்ந்து வந்த சசிகலாவும் மரியாதை செலுத்தினார். அப்போது ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் சசிகலாவுடன் பேசினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலாவிடம், 'அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்?' என்று கேட்டபோது, "நடப்பது எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்" என்று பதிலளித்தார்.