அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து, செலவுகளை குறைக்கவும், பிற நாடுகளுக்கு வழங்கப்படும் தேவையில்லாத நிதி உதவிகளை நிறுத்தும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கி வந்த நான்காயிரம் கோடி ரூபாய் நிதி உதவி நிறுத்தப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அடுத்த கட்டமாக அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், தாமாகவே முன்வந்து ராஜினாமா செய்பவர்களுக்கு எட்டு மாத சம்பளம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அரசு ஊழியர்கள் தாங்கள் வேலை செய்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும், பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எலான் மஸ்க் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்கள் கணிசமான அளவில் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுவதால், அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.