காலை வர்த்தகத்தின் போது தங்கம் வீழ்ச்சி ஏற்பட்ட நிலையில், மாலை வர்த்தகத்தில் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. காலையில், ஒரு சவரன் தங்கம் ரூ. 1,800 குறைந்து ரூ. 88,800-க்கு விற்பனையானது; ஒரு கிராம் தங்கம் ரூ. 225 குறைந்து ரூ. 11,100-க்கு விற்கப்பட்டது.
இந்த நிலையில், மாலை வர்த்தகம் முடிவடையும் தருவாயில், ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 1,600 உயர்ந்து ரூ. 90,400-ஐ எட்டியுள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ. 200 உயர்ந்து ரூ. 11,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே, இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ. 165-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.