டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

Mahendran

வியாழன், 30 அக்டோபர் 2025 (16:49 IST)

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு துணிச்சல் இல்லை என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

 
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது நாளந்தாவில் பேசிய ராகுல், "இந்தியா-பாகிஸ்தான் மோதலை தான் நிறுத்தியதாக ட்ரம்ப் பலமுறை பகிரங்கமாக கூறுகிறார். ஆனால், அதை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை" என்று சாடினார்.
 
அவர் மேலும் கூறியதாவது: பிகார் தற்போது வினாத்தாள் கசிவுகள் மற்றும் மோசமான சுகாதார கட்டமைப்புக்கு ஒத்த மாநிலமாக மாறிவிட்டது.
 
மாநில அரசு தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் நிலங்களை வழங்கியுள்ளது என்றும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் 'பிகாரில் நிலம் இல்லை' என்ற கூற்று தவறானது என்றும் அவர் விமர்சித்தார்.
 
கடந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வாக்குத்திருட்டு மூலம் ஆட்சியை அமைத்தது. மேலும், டாக்டர் அம்பேத்கர் வடிவமைத்த அரசியலமைப்பை அழிக்க பிரதமர் மோடியும் தேசிய ஜனநாயக கூட்டணியும் தீவிரமாக உள்ளன.
 
பிகாரில் 'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அது விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் அரசாக இருக்கும். மேலும், நாளந்தாவில் உலகின் சிறந்த பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்