ஏழுமலையான் கோவிலில் ரூ.300 தரிசன டிக்கெட் எப்போது? தேவஸ்தானம் தகவல்

Webdunia
சனி, 25 மார்ச் 2023 (14:07 IST)
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலில் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள்  வரும் மார்ச் 27 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது

ஆந்திரம்  மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள திருமலை திருப்பதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான ஏழுமலையான கோவிலுக்கு உலகம் முழுவதிலுமிருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் வந்து சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கின்றனர்.

இக்கோவிலில், விஐபி தரிசனம், 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசனம், இலவச தரிசனம் என பலவேறு ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயில், வரும் ஏப்ரல் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் மார்ச் 27 ஆம் தேதி காலை 11 மணிக்கு  ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் கூறியுள்ளது.

ஆன்லைனில் டிக்கெட்டுகள் பெற விரும்புவோர் இந்த இணையதளத்தில் டிக்கெட்டுகள் பெறலாம். http:/tirupatibalaji.ap.gov.in

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்