கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதில் இரண்டு வாரங்கள் முடிந்தது விட்டது என்பதும் ஊரடங்கு உத்தரவு முடிய இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பின்னரும் 15 நாட்கள் அல்லது ஒரு மாதம் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக மதுக்கடைகள் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளதால் மதுவுக்கு அடிமையானவர்கள் விபரீத செயலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் அதனால் ஒரு சில உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மதுவுக்கு அடிமையானவர்களை திருப்தி செய்வதற்காக மேற்கு வங்க அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு நாளும் 2 மணி முதல் 5 மணி வரை ஆர்டர் செய்தால் வீடு தேடி மது விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இருப்பினும் மேற்கு வங்க அரசின் இந்த அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களான காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் மட்டும் வீடு தேடி சென்று கொடுத்தால் போதும் என்றும், மதுவை வீடு தேடி சென்று கொடுக்க வேண்டாம் என்று வலியுறுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது