சரக்குக்கு தடா... கிருமி நாசினி தயாரிக்கும் ’பக்கார்டி’ நிறுவனம்!!

செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (16:04 IST)
மதுபான தயாரிப்பு நிறுவனமான பக்கார்டி மது தயாரிப்பை நிறுத்திவிட்டு கிருமி நாசினி தயாரிக்க முன்வந்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதும் பீதியை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில் கிருமி நாசினி, மாஸ்க் ஆகியவற்றிற்கு டிமேண்ட் அதிகமாகியுள்ளது. எனவே, இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 70,00 லி கிருமி நாசினி தயாரித்து வழங்க பக்கார்டி நிறுவனம் முன்வந்துள்ளது. 
 
இதற்கு முதற்கட்ட பணியாக தெலங்கானா உள்ள தனது மது தயாரிப்பு ஆலையில் கிருமி நாசினி தயாரிக்கும் பணியை துவங்கியுள்ளது. அதாவது, மது தயாரிக்க கையிருப்பில் இருக்கும் ஆல்கஹாலைக் கொண்டு கிருமி நாசினி தயாரிக்க முடிவெடுத்து அதற்கான பணிகளையும் அந்நிறுவனம் முடக்கிவிட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்