காங்கிரஸ் ஆட்சியமைக்காது - காஷ்மீர் முன்னாள் முதல்வர்

Webdunia
செவ்வாய், 19 ஜூன் 2018 (17:35 IST)
ஜம்மூ காஷ்மீரில் பிடிபி கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க மாட்டோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

 
காஷ்மீரில் மெகபூபா அரசுக்கான ஆதரவை பாஜக வாபஸ் பெறுவதாக அறிவித்தது. இதையடுத்து முதல்வர் மெகபூபா முஃப்தி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
 
காஷ்மீர் மாநிலத்தில் தங்களது குற்றத்தை பாஜக ஒப்புக்கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார். 
 
பிடிபி கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டிய அவசியம் தற்போது எழவில்லை. பிடிபி கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க மாட்டோம் என்று குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்