காஷ்மீரில் ரமலானன்று வெடித்த கலவரம்; 20வயது இளைஞர் பலி

சனி, 16 ஜூன் 2018 (13:41 IST)
காஷ்மீரில் ரமலான் தொழுகையை அடுத்து வெடித்த மோதலில் 20வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
உலகம் முழுவதும் இன்று ரமலான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பாதுகாப்பு படையினரிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
காஷ்மீர் மாநிலம் ஆனந்த்நாக் மாவட்டத்தில் ரமலான் தொழுகையை அடுத்து உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே மோதல் வெடித்தது. பாதுகாப்பு படையினரை நோக்கி இளைஞர்கள் கற்களை வீசி தாக்குதலை நடத்தினர். இதனால் இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டது.
 
இதில் படுகாயம் அடைந்த 10பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஷீராக் அகமது என்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரமலான் பண்டிகையன்று நடந்த இந்த உயிரிழப்பு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்