ஆம்புலன்ஸ் விபத்து- கர்ப்பிணி பெண் பலி

Webdunia
செவ்வாய், 19 ஜூன் 2018 (17:26 IST)
கர்ப்பிணியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் வேன் விபத்தில் சிக்கியதால், அதில் பயணித்த கர்ப்பிணி பெண் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 
மத்தியப்பிரதேசம், புரினியா மாவட்டத்தில் சேர்ந்த பெண்மணி ஒருவர் பிரசவ வேதனையால் துடித்தார். இதனால்,  அப் பெண்மணியை உடனே ஆம்புலன்ஸ் மூலம் அங்குள்ள சுரக்‌ஷா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
 
அப்போது, அந்த ஆம்புலன்ஸ் கைலாராஸ் அருகே சென்றபோது எதிரே வந்த ஒரு பஸ் ஆம்புலன்ஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில், ஆம்புலன்ஸில் இருந்த கர்ப்பிணிப் பெண் மற்றும் அவருக்கு துணையாக சென்ற மாமியார், ஆம்புலன்ஸ் டிரைவர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
 
இந்த விபத்தில் படுகாயமடைந்த அந்த கர்ப்பிணியின் கணவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்