உடைந்த காலுடன் நடந்தே ஊருக்குச் சென்ற தொழிலாளி ! மனதை உருக்கும் வீடியோ!!

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2020 (21:11 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு இளைஞர் உடைந்த காலுக்கு போட்டிருந்த மாவுக்கட்டை பிரித்துவிட்டு அதேகாலுடன் ஊருக்கு புறப்பட்ட சம்பவன் நெஞ்சை பதறவைப்பதாக உள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பிபாரியா நகரில் வேலை செய்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளி பன்வர்லால்.

சமீபத்தில் கொரோனா தொற்று இந்தியாவிற்குப் பரவியதால் இந்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனவே பன்வர்லால் தனது கால் முறிந்ததற்காகப் போடப்பட்ட மாவுக்கட்டுகளை கத்திரிக்கோல் கொண்டு பிரித்து எடுத்துவிட்டு, அதே காலுடன் சொந்த ராஜஸ்தானுக்கு திரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும், 500 கி.மீ தூரம் நடந்தே வந்ததாகவும், மீதி 240 கிமீ தூரத்தை நடந்துதான் செல்லவேண்டும் என்று கூறிவரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்