இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

Siva
திங்கள், 11 நவம்பர் 2024 (17:01 IST)
விஸ்தாரா விமான நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து விட்டதை அடுத்து இன்று கடைசி நாளாக விஸ்தாரா என்ற பெயரில் அந்த விமானம் அந்த நிறுவனத்தின் விமானங்கள் இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர் இந்தியா நிறுவனத்துடன் விஸ்தாரா விமான நிறுவனத்தை இணைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த பணி நிறைவு பெற்றுள்ளது.

இதனையடுத்து, இன்று விஸ்தாரா நிறுவனத்தின் விமானங்கள் தனது கடைசி பயணத்தை செய்து கொண்டிருக்கின்றன. இன்று இரவு மும்பையில் இருந்து டெல்லி செல்லும் விமானம் உள்நாட்டு கடைசி விமானம் என்றும், சிங்கப்பூரில் இருந்து டெல்லி வரும் விமானம் சர்வதேச விமானத்தின் கடைசி விமானம் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து விஸ்தாரா நிறுவன அதிகாரிகள் கூறிய போது, எங்களுக்குள் ஒரு கலவையான உணர்வு ஏற்பட்டுள்ளது. விஸ்தாரா நிறுவனத்தில் பணியாற்றும் நாங்கள் இனி ஏர் இந்தியா நிறுவனத்தின் ஊழியர் ஆகியதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் அடையாளம் விஸ்தாரா தானே என்பதால், எங்களுக்கு எப்போதும் பெருமையாக விஸ்தாரா இருக்கும் என்று கூறியுள்ளனர்.

2015 ஆம் ஆண்டு தனது முதல் விமான சேவையை தொடங்கிய விஸ்தாரா நிறுவனம் ஏராளமான இந்திய மக்களின் ஆதரவை பெற்றது என்பதும், பிரிமியம் எக்கனாமி என்ற முறையை விஸ்தாரா தான் முதன் முதலில் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. விஸ்தாரா விமான நிறுவனத்தின் 51% பங்குகளை டாடா சன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதை அடுத்து, ஏர் இந்தியாவுடன் விஸ்தாரா இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்