சீக்கிய இனப்படுகொலையின் 40வது ஆண்டு நினைவு முன்னிட்டு ஏர் இந்தியா விமானங்கள் தாக்கப்படலாம் என்று அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, நவம்பர் 1 முதல் 19ஆம் தேதி வரை இந்தியாவில் பொதுமக்கள் ஏர் இந்திய விமானங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று காலிஸ்தான் பிரிவினைவாத தீவிரவாதி குருபந்த் பன்னுன் இன்று புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
ஏற்கனவே நாட்டின் பல விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள நிலையில், கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்ய வேண்டாம் என காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டி இருப்பது பயணிகள் பெருமளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.