தடுப்பூசி வாங்குவதில் இந்தியா தாமதம்… வைரலாஜிஸ்ட் புகார்!

Webdunia
திங்கள், 24 மே 2021 (11:32 IST)
கொரோனா தடுப்பூசி கொள்முதலில் இந்தியா விரைந்து செயல்படவில்லை என வைரலாஜிஸ்ட் சுகன் தீப் காங் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை ஆரம்பித்தது. அதன் கொரோனா முன்களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது என்றாலும் பற்றாக்குறை பெரிய அளவில் உள்ளது. இந்நிலையில் வைரலாஜிஸ்ட் சுகன் தீப் காங் இந்தியா தடுப்பூசிகளை பெரிய அளவில் கொள்முதல் செய்வதில் மெத்தனம் காட்டியது எனக் கூறியுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடந்த மார்ச் மாதமே தடுப்பூசிக்காக மிகப்பெரிய தொகையை முதலீடு செய்தன. நாம் கொள்முதல் அட்டவணையில் பின் தங்கிவிட்டோம் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்