இந்தியாவை மகிழ்விக்க எப்பவும் வருவேன்: விஜய் மல்லையா!!

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2017 (12:26 IST)
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியை விஜய் மல்லையா நேரில் கண்டுகழித்தார்.


 
 
இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு தற்போது லண்டனில் தஞ்சமடைந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா மைதானத்திற்கு வந்து கிரிக்கெட் பார்ப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டியை பார்வையிட நான் வருகை தந்ததை அனைத்து ஊடகங்களும் செய்திகளாக வெளியிட்டு இருந்தது. இந்திய அணியை மகிழ்விக்க நான் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொள்ள விருப்பதாக உள்ளேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.
 
இவரின் இந்த பதிவு அனைவரின் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. கடன் பெற்றுவிட்டு அனைத்து கிரிக்கெட் போட்டியையும் ரசிப்பேன் என கூறி இருப்பது கண்டிக்க தக்க வகையில் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அடுத்த கட்டுரையில்