இந்திய ஊடகங்களுக்கு வேற வேல வெட்டி இல்லை. விஜய்மல்லையாவின் திமிர்ப்பதிவு

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2017 (03:43 IST)
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா ரூ.9000 கோடி இந்திய வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்று தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்தார். அவரை நேற்று இண்டர்போல் போலீஸ் உதவியால் கைது செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட மூன்றே மணி நேரத்தில் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.


 


மூன்று மணி நேரத்தில் விஜய் மல்லையா ஜாமீன் பெற்றது எப்படி? என்று இந்திய ஊடகங்கள் ஆச்சரியத்துடன் விவாதம் செய்து கொண்டிருந்த நிலையில் இதுகுறித்து விஜய் மல்லையா தனது டுவிட்டரில் கேலியாக குறிப்பிட்டுள்ளார்.

'இந்திய ஊடகங்கள் வழக்கம்போல் இந்த விஷயத்தை பெரிதாக்கியுள்ளன. ஏற்கனவே எதிர்பார்த்தது போலத்தான் இன்று நீதிமன்றத்தில் விசாரணை துவங்கியுள்ளது' என்று அவர் விஜய் மல்லையா தனது டுவிட்டரில் திமிராக பதிவு செய்துள்ளார்.

இதன் மூலம் தான் ஏற்கனவே கைது செய்யப்படுவோம் என்றும் அதே நேரத்தில் ஜாமீனும் கிடைக்கும் என்றும் அவருக்கு முன்பே தெரிந்துள்ளதாக கருதப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்