தமிழக வாகனங்களை உள்ளே விட மாட்டோம் - வாட்டாள் நாகராஜ் ஆவேசம்

Webdunia
வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (11:47 IST)
தமிழகத்தில் போராட்டம் தொடர்ந்தால் கர்நாடக எல்லைக்குள் தமிழக வாகனங்களை அனுமதிக்க மாட்டோம் என வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார்.

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. திமுக, விடுதலை சிறுத்தை, மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
 
நேற்று சென்னை வந்த பிரதமர் மோடிக்கு பல இடங்களில் கருப்பு கொடி காட்டப்படது. வானில், கருப்பு பலூன்களும் பறக்கவிடப்பட்டன.
 
இந்நிலையில், கன்னட கூட்டமைப்பை சேர்ந்த வாட்டாள் நாகராஜ் தலைமையில் நேற்று, பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கூடாது என அவர்கள் கோஷமிட்டனர்.
 
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வாட்டாள் நாகராஜ் “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தேவையில்லை என உச்ச நீதிமன்றம் கூறிய பின்பும், தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இது தொடர்ந்தார்ல் வருகிற 16ம் தேதி தமிழக வாகனங்களை கர்நாடக எல்லைக்குள் நுழைய விட மாட்டோம்” என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்