எதிர்ப்புக்கு நடுவில் சென்னை வந்தார் மோடி...

வியாழன், 12 ஏப்ரல் 2018 (09:49 IST)
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் கடும் கொந்தளிப்பு எழுந்துள்ள நிலையில், பிரதமர் மோடி தற்போது சென்னை விமான நிலையம் வந்துள்ளார்.

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. அந்நிலையில், இன்று சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்படும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், பாரதிராஜா தலைமையிலான அமைப்பும் விமான நிலையத்தில் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவோம் எனக் கூறியுள்ளது.
 
அதன்படி இன்று காலை 9 மணியளவில் சென்னை விமான நிலையம் இயக்குனர்கள் பாரதிராஜா, ராம், அமீர், கவுதமன், வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ‘மோடியே திரும்பிப் போ’ என முழக்கங்கள் எழுப்பினர்.  விமான நிலையத்தில் அவர்கள் நுழைய முயன்றதால் அங்கிருந்த போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்து வேனில் ஏற்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படது. 
 
இந்நிலையில், சரியாக 9.30 மணியளவில் பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தார். அவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
 
மோடி அங்கிருந்து ஹெலிஹாப்டர் மூலம் கிழக்கு கடற்கரை சாலை சென்று அங்கு ராணுவக் கண்காட்சியை திறந்து அவர் வைக்கிறார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்