வளர்ப்பு நாய் குரைத்ததால் தகராறு; பெண் பலி!

Webdunia
புதன், 11 ஜனவரி 2023 (15:24 IST)
உத்தரபிரதேசத்தில் வளர்ப்பு நாய் குரைத்ததால் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் கிஹர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் லால் முனியா என்ற பெண். இவரது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் உள்ள சிவசாகர் பிந்த் என்பவர் வளர்ப்பு நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.

நேற்று இரவு லால் முனியா தனது வீட்டிற்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தபோது சிவசாகர் பிந்த் வளர்த்த நாய் லால் முனியாவை குரைத்ததுடன், கடித்தும் உள்ளது. இதுதொடர்பாக லால் முனியா குடும்பத்தினர் சிவசாகர் பிந்த் குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில் ஒருவரையொருவர் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் லால் முனியா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்