பிருத்வி -2 ஏவுகணை சோதனை வெற்றி: இந்திய விஞ்ஞானிகளுக்கு குவியும் பாராட்டு!

புதன், 11 ஜனவரி 2023 (13:14 IST)
350 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கம் பிருத்வி -2 என்ற ஏவுகணையை இந்தியா வெற்றி கரமாக சோதனை நடத்தி உள்ளதை அடுத்து இந்திய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
ஒடிஷா கடற்கரை பகுதியில் உள்ள சந்திப்பூர் என்ற இடத்தில் இந்த சோதனையை நடத்தப்பட்டதாக  பாதுகாப்பு துறை அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. 
 
இந்தியாவின் அணுசக்தி தடுப்பில் இந்த ஏவுகணை ஒருங்கிணைந்த பகுதி என்றும் மிகவும் துல்லியமாக அதன் இலக்கை தாக்கி வெற்றிகரமாக சோதனை முடிந்தது என்றும் அந்த செய்தி குறிப்பில் கூறப்படுகிறது
 
350 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கம் திறன் கொண்டது என்பது இந்த ஏவுகணையால் இந்தியாவின் ராணுவ பலம் அதிகரித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்