ஆபரேஷன் காலநேமி.. 82 போலி சாமியார்கள் கைது.. ஒரே நாளில் பிடிபட்ட 32 நபர்கள்.. தொடரும் வேட்டை..!

Siva

திங்கள், 14 ஜூலை 2025 (12:38 IST)
உத்தராகண்ட் மாநிலத்தில் போலி சாமியார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், மக்களின் மத உணர்வுகளை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதாகவும் அரசுக்கு தகவல் கிடைத்த நிலையில், இதுகுறித்து 'ஆபரேஷன் காலநேமி' என்ற திட்டம் உருவானது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் போலி சாமியார்கள் வேட்டையாடப்பட்ட நிலையில், இதுவரை 82 போலி சாமியார்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், நேற்று ஒரே நாளில் 34 பேரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்ததாகவும் கூறப்படுகிறது.
 
மக்களின் மத நம்பிக்கையைப் பயன்படுத்தி மதத்தின் பெயரால் சுரண்டும் இதுபோன்ற நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க உத்தராகண்ட் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட 34 பேர்களில் 23 பேர் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
இந்த போலி சாமியார்கள், யாத்திரை நடைபெறும் பாதையில் இருந்து பக்தர்களிடம் ஜோசியம் சொல்வது, ஆசி வழங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதுபோன்ற நபர்கள் இன்னும் வேட்டையாடப்பட்டு வருவதாகவும், போலி சாமியார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறை முடிவு செய்துள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்