வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகிய பின், தற்போது அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் என்பவர் ஆட்சி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ப்பிற்கு பிறகு இந்தியா - வங்கதேசத்திற்கு இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சீனா மற்றும் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை முகமது யூனுஸ் எடுத்து வருவதால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சிக்கல் அடைந்த நிலையில், திடீரென முகமது யூனுஸ், பிரதமர் மோடிக்கு 1000 கிலோ மாம்பழங்களை அனுப்பி உள்ளார். இவை நாளை இந்தியா வந்தடையும் என்று வங்கதேச தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், அவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திரிபுரா முதல்வர் மாணிக் சஹா ஆகியோர்களுக்கும் மாம்பழங்களை அனுப்பியுள்ளார். இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதை அடுத்து, மீண்டும் நட்பு பாராட்டுவதற்காக இந்த மாம்பழப் பரிசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது.